Sign in
Sign in
Sign in
Select Language
007

Al-A'raf 7:116 قال القوا فلما القوا سحروا اعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم ١١٦

7:116
قَالَ
أَلۡقُواْۖ
فَلَمَّآ
أَلۡقَوۡاْ
سَحَرُوٓاْ
أَعۡيُنَ
ٱلنَّاسِ
وَٱسۡتَرۡهَبُوهُمۡ
وَجَآءُو
بِسِحۡرٍ
عَظِيمٖ
١١٦
அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ

(Either you throw (first), or shall we have the (first) throw) before you. In another Ayah, they said,

وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَى

(Or we be the first to throw) 20:65. Musa said to them, you throw first. It was said that the

…
إِمَّآ أَن تُلْقِىَ وَإِمَّآ أَن نَّكُونَ نَحْنُ الْمُلْقِينَ

(Either you throw (first), or shall we have the (first) throw) before you. In another Aya

…
More Tafsirs

Read in Context

Chapter 7, Page 164, Juz 9

109. (இதைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கிறார்'' என்று கூறினார்கள். 110. (அதற்கு ஃபிர்அவ்ன்) ‘‘இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?'' (என்று கேட்டான்.) 111. அதற்கவர்கள் ‘‘அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிட்டு பல பட்டிணங்களுக்கும் துப்பறிபவர்களை அனுப்பிவை. 112. அவர்கள் சூனியத்தில் வல்லவர்களை உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள். 113. (அவ்வாறு அனுப்பியதில் பல திசைகளிலும் இருந்த) சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் ‘‘(மூஸாவை) ஜெயித்துவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி உண்டு (அல்லவா?)'' என்று கேட்டனர். 114. அதற்கவன் ‘‘ஆம்! (உங்களுக்கு வெகுமதி உண்டு.) மேலும், நிச்சயமாக நீங்கள் (நம் அரசவையிலும் எனக்கு) மிக்க நெருங்கியவர்களாக இருப்பீர்கள்'' என்றும் கூறினான். 115. (பின்னர், அச்சூனியக்காரர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (முதலில் உமது தடியை) நீங்கள் எறிகிறீரா? அல்லது நாம் எறிவதா?'' என்று கேட்டனர். 116. அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர். 117. அதுசமயம் நாம் ‘‘மூஸாவே! நீர் உமது தடியை எறிவீராக'' என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது. 118. இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று. 119. ஆகவே, (கர்வம் கொண்டிருந்த) அவர்கள், அங்கு தோல்வியுற்று சிறுமைப்பட்ட வர்களாக மாறினார்கள். 120. அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், 121. ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்'' என்று கூறினார்கள். 122. மூஸா, ஹாரூனுடைய இறைவனை நாங்களும் (நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.) 123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 124. நிச்சயமாக நான் உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான். 125. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை)'' என்று கூறினார்கள். 126. ‘‘இன்னும், எங்களிடம் வந்த இறைவனின் அத்தாட்சிகளை நாங்கள் நம்பிக்கை கொண்டதைத் தவிர வேறு எதற்காகவும் நீ எங்களை பழிவாங்கவில்லை'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிய பிறகு) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! (உனக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக (எங்களை ஆக்கி) எங்களை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!'' (என்று பிரார்த்தித்தார்கள்.)

- Abdul Hameed Baqavi

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute