Sign in
Sign in
Sign in
Select Language
048

Al-Fath 48:26 اذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فانزل الله سكينته على رسوله وعلى المومنين والزمهم كلمة التقوى وكانوا احق بها واهلها وكان الله بكل شيء عليما ٢٦

48:26
إِذۡ
جَعَلَ
ٱلَّذِينَ
كَفَرُواْ
فِي
قُلُوبِهِمُ
ٱلۡحَمِيَّةَ
حَمِيَّةَ
ٱلۡجَٰهِلِيَّةِ
فَأَنزَلَ
ٱللَّهُ
سَكِينَتَهُۥ
عَلَىٰ
رَسُولِهِۦ
وَعَلَى
ٱلۡمُؤۡمِنِينَ
وَأَلۡزَمَهُمۡ
كَلِمَةَ
ٱلتَّقۡوَىٰ
وَكَانُوٓاْ
أَحَقَّ
بِهَا
وَأَهۡلَهَاۚ
وَكَانَ
ٱللَّهُ
بِكُلِّ
شَيۡءٍ
عَلِيمٗا
٢٦
நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Some of the Benefits gained from the Treaty at Al-Hudaybiyyah

Allah the Exalted states that the Arab idolators from Quraysh and their allies who extended help to them against His Messenger ,

هُمُ الَّذِينَ كَفَرُواْ

(They are those who disbelieved), they are indeed the disbelievers,

وَصَدُّوكُمْ عَنِ ال

…

Some of the Benefits gained from the Treaty at Al-Hudaybiyyah

Allah the Exalted states that the Arab idolators from Quraysh and their allies who extend

…
More Tafsirs

Read in Context

Chapter 48, Page 514, Juz 26

18. திட்டவட்டமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களை திருப்தி அடைந்தான், அவர்கள் உம்மிடம் மரத்தின் கீழ் விசுவாச உறுதிமொழி செய்தபோது. ஆக, அவன் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை (-உறுதிமொழியை நிறைவேற்றும் உண்மையான எண்ணத்தை) அறிந்தான். ஆகவே, அவர்கள் மீது அமைதியை (நிம்மதியை, பொறுமையை, கண்ணியத்தை, மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை) இறக்கினான்; இன்னும், சமீபமான ஒரு வெற்றியையும் அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். 19. இன்னும், அதிகமான கனீமத்துகளை (அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுப்பான்). அவர்கள் அவற்றை பெறுவார்கள். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். 20. அல்லாஹ் உங்களுக்கு அதிகமான கனீமத்துகளை வாக்களித்தான். அவற்றை நீங்கள் பெறுவீர்கள். ஆக, (அவற்றில்) இதை (-கைபர் யுத்தத்தின் கனீமத் பொருட்களை) அவன் உங்களுக்கு விரைவாகக் கொடுத்தான். இன்னும், (பிற) மக்களின் கரங்களை உங்களை (விட்டும் உங்கள் குடும்பத்தை) விட்டும் அவன் தடுத்தான். (நம்பிக்கையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல்லாஹ் பாதுகாத்தது) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும்; இன்னும், உங்களை நேரான பாதையில் வழி நடத்துவதற்காகவும் (அவன் உங்களை விட்டு எதிரிகளின் கரங்களை தடுத்து, உங்களை பாதுகாத்தான்). 21. இன்னும் (நாடுகளில்) வேறு பலவற்றையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறான். (இப்போது) நீங்கள் அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். 22. நிராகரிப்பாளர்கள் உங்களிடம் போரிட்டால் (கண்டிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டி (ஓடி)யிருப்பார்கள். பிறகு, அவர்கள் (தங்களுக்கு) பாதுகாவலரையும் உதவியாளரையும் காண மாட்டார்கள். 23. இதற்கு முன்னர் சென்ற அல்லாஹ்வின் நடைமுறைப்படிதான் (இவர்களுடனும் அல்லாஹ் நடந்து கொண்டான்). அல்லாஹ்வின் நடைமுறையில் (எவ்வித) மாற்றத்தை(யும்) நீர் காணமாட்டீர். 24. அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான். 25. (மக்காவின் குறைஷிகளாகிய) அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் (அல்லாஹ்வை பரிசுத்தமாக வணங்குவதையும் உமது தூதுத்துவத்தையும்) நிராகரித்தார்கள்; இன்னும், புனிதமான மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியை – அது தனது இடத்திற்கு (சென்று) சேர்வதையும் - அவர்கள் தடுத்தார்கள். இன்னும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்திருந்தால் (நீங்கள் அந்த மக்காவாசிகளை தாக்கும்படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிடுவதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் - கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்து நிராகரிப்பாளர்களை விட்டு) நீங்கி இருந்திருந்தால் அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை துன்புறுத்தும் தண்டனையால் தண்டித்திருப்போம். 26. நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute