Sign in
Sign in
Sign in
Select Language
059

Al-Hashr 59:13 لانتم اشد رهبة في صدورهم من الله ذالك بانهم قوم لا يفقهون ١٣

59:13
لَأَنتُمۡ
أَشَدُّ
رَهۡبَةٗ
فِي
صُدُورِهِم
مِّنَ
ٱللَّهِۚ
ذَٰلِكَ
بِأَنَّهُمۡ
قَوۡمٞ
لَّا
يَفۡقَهُونَ
١٣
(முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகிறார்கள்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

The False Promise of Support the Hypocrites gave to the Jews

Allah states that the hypocrites, `Abdullah bin Ubayy and his like, sent a messenger to Bani An-Nadir promising them help. Allah the Exalted said,

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَـفَقُواْ يَقُولُونَ لإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُواْ مِنْ أَهْ
…

The False Promise of Support the Hypocrites gave to the Jews

Allah states that the hypocrites, `Abdullah bin Ubayy and his like, sent a messenger to Ba

…
More Tafsirs

Read in Context

Chapter 59, Page 547, Juz 28

11. நயவஞ்சகர்களை நீர் பார்க்கவில்லையா? வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்த தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் (உங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் (உங்களுக்கு உதவுவதற்கு) நிச்சயமாக நாங்களும் வெளியேறி உங்களுடன் வருவோம். உங்கள் விஷயத்தில் யாருக்கும் எப்போதும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம். இன்னும், உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.” அல்லாஹ் சாட்சி சொல்கிறான், “நிச்சயமாக இவர்கள் (-இந்த நயவஞ்சகர்கள்) பொய்யர்கள்தான்!” 12. அவர்கள் (-நிராகரித்த வேதக்காரர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். இன்னும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். (அப்படியே) இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் இவர்களும் கண்டிப்பாக புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பிறகு, (ஒருக்காலும்) இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (நிராகரித்தவர்களுக்கு உதவிய இந்த நயவஞ்சகர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.) 13. (முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகிறார்கள்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள். 14. அவர்கள் (-அந்த யூதர்கள்) பாதுகாப்பான ஊர்களில்; அல்லது, சுவர்களுக்கு பின்னால் இருந்தே தவிர, அவர்கள் எல்லோரும் சேர்ந்து (நேரடியாக) உங்களிடம் போர் புரிய மாட்டார்கள். அவர்களின் பகைமை அவர்களுக்கு மத்தியில் கடுமையாக இருக்கிறது. நீர் அவர்களை ஒன்று சேர்ந்தவர்களாக எண்ணுகிறீர். ஆனால், அவர்களின் உள்ளங்களோ பலதரப்பட்டதாக (பிரிந்து) இருக்கின்றன. அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியாத மக்கள் ஆவார்கள். 15. (இந்த யூதர்களுக்கு உதாரணம்) இவர்களுக்கு சற்று முன்னர் தங்கள் (தீய) காரியத்தின் கெடுதியை (பத்ர் போரில்) அனுபவித்தார்களே அவர்களின் உதாரணத்தைப் போன்றுதான். இன்னும் (இதை விட) துன்புறுத்தும் தண்டனை (மறுமையில்) இவர்களுக்கு உண்டு. 16. (நபிக்கு எதிராக யூதர்களைத் தூண்டிய நயவஞ்சகர்களின் உதாரணம்) அந்த ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றுதான். அவன் மனிதனுக்கு, “நீ நிராகரித்து விடு” என்று கூறினான். அந்த மனிதன் நிராகரித்துவிடவே, “உன்னை விட்டு நிச்சயமாக நான் நீங்கியவன், நிச்சயமாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் பயப்படுகிறேன்” என்று கூறி (அந்த மனிதனை விட்டும் அவன் விலகி) விடுகிறான். 17. ஆக, அவ்விருவரின் முடிவானது, “நிச்சயமாக அவ்விருவரும் நரகத்தில் இருப்பார்கள், அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள்” என்பதாக ஆகிவிடும். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute