Sign in
Sign in
Sign in
Select Language
058

Al-Mujadila 58:10 انما النجوى من الشيطان ليحزن الذين امنوا وليس بضارهم شييا الا باذن الله وعلى الله فليتوكل المومنون ١٠

58:10
إِنَّمَا
ٱلنَّجۡوَىٰ
مِنَ
ٱلشَّيۡطَٰنِ
لِيَحۡزُنَ
ٱلَّذِينَ
ءَامَنُواْ
وَلَيۡسَ
بِضَآرِّهِمۡ
شَيۡـًٔا
إِلَّا
بِإِذۡنِ
ٱللَّهِۚ
وَعَلَى
ٱللَّهِ
فَلۡيَتَوَكَّلِ
ٱلۡمُؤۡمِنُونَ
١٠
(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

The Evil of the Jews

Ibn Abi Najih reported from Mujahid,

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُواْ عَنِ النَّجْوَى ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنْهُ

(Have you not seen those who were forbidden to hold secret counsels, and afterwards returned to that which they had been forbidden,) He said, "The Jews." S

…

The Evil of the Jews

Ibn Abi Najih reported from Mujahid,

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نُهُواْ عَنِ النَّجْوَى ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنْهُ

(Have

…
More Tafsirs

Read in Context

Chapter 58, Page 543, Juz 28

5. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறார்களோ (மாறுசெய்கிறார்களோ, அவர்களின் சட்டங்களை எதிர்க்கிறார்களோ) அவர்கள், அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். இன்னும், திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். இழிவுதரும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு. 6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு (அப்போது) அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான். 7. (நபியே!) நீர் அறியவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான்: என்று. மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. இன்னும், ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. இன்னும், அதை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்க மாட்டார்கள், அவன் அவர்களுடன் இருந்தே தவிர, அவர்கள் எங்கிருந்தாலும் சரியே! பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். 8. கூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் பாவத்தையும் எல்லை மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமனாகக் கூறவில்லையோ அதை முகமனாகக் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள், “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை தண்டனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். ஆக, மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும். 9. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவ(மான காரிய)த்தையும் (மார்க்க சட்டங்களை) மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். இன்னும், நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். 10. (சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும். 11. நம்பிக்கையாளர்களே! (உங்கள் சபைகளுக்குள் நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) “சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்!” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தில்) விசாலத்தை ஏற்படுத்துவான். இன்னும், (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்பட்டு விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான். 12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் (ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன். 13. உங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்கள் செய்வதை (-அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமோ என) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை.) ஆகவே, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute