Sign in
Sign in
Sign in
Select Language
026

Ash-Shu'ara 26:25 قال لمن حوله الا تستمعون ٢٥

26:25
قَالَ
لِمَنۡ
حَوۡلَهُۥٓ
أَلَا
تَسۡتَمِعُونَ
٢٥
அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: (இவர் கற்பனையாக கூறுவதை) நீங்கள் செவியுறுகிறீர்களா?
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Allah tells us about the disbelief, rebellion, oppression and denial of Fir`awn, as He says:

وَمَا رَبُّ الْعَـلَمِينَ

((Fir`awn said:) "And what is the Lord of the `Alamin") This is because he used to say to his people:

مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ إِلَـهٍ غَيْرِى

(I know not that you have a god other tha

…

Allah tells us about the disbelief, rebellion, oppression and denial of Fir`awn, as He says:

وَمَا رَبُّ الْعَـلَمِينَ

((Fir`awn said:) "And what is the

…
More Tafsirs

Read in Context

Chapter 26, Page 368, Juz 19

10. அந்நேரத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூஸாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! என்று கூறினான். 11. ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச வேண்டாமா! 12. (மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.” 13. “இன்னும், என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; என் நாவு பேசாமல் ஆகிவிடும். ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி) வஹ்யி அனுப்புவாயாக!” 14. இன்னும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். 15. (அல்லாஹ்) கூறினான்: “அவ்வாறல்ல! ஆக, நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளை (அவர்களிடம்) கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம். 16. ஆக, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! இன்னும், “நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்” என்று (அவனிடம்) கூறுங்கள்! 17. நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு! 18. (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை (நீ) குழந்தையாக (இருந்தபோது) எங்களிடம் வளர்க்கவில்லையா? இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா)!” 19. “இன்னும், (மூஸாவே!) நீ உனது (ஒரு கெட்ட) செயலை செய்து விட்டாய். நீ நன்றி கெட்டவர்களில் ஒருவராக இருக்கிறாயே.” 20. (மூஸா) கூறினார்: (ஆம்,) அ(ந்த கெட்ட காரியத்)தை நான் செய்தேன், அப்போது, நானோ (அல்லாஹ்வின் மார்க்கத்தை) அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்தேன். 21. ஆக, உங்களை நான் பயந்தபோது உங்களை விட்டு ஓடிவிட்டேன். ஆக, என் இறைவன் எனக்கு (நபித்துவ) ஞானத்தை வழங்கினான். இன்னும், என்னை இறைத்தூதர்களில் ஒருவராக ஆக்கினான். 22. இன்னும், அ(ப்படி என்னை நீ வளர்த்த)து நீ என் மீது சொல்லிக் காட்டுகிற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய். (ஆனால், என்னை அடிமையாக்கவில்லை. அதற்காக நான் உன்னை சத்தியத்தின் பக்கம் அழைப்பதை விட முடியாது.) 23. ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?” 24. (மூஸா) கூறினார்: வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள் (கண்ணால் பார்ப்பதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அதுபோன்றே படைப்பாளன் அல்லாஹ்தான். அவனே வணங்கத் தகுதியானவன் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்.) 25. அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: (இவர் கற்பனையாக கூறுவதை) நீங்கள் செவியுறுகிறீர்களா? 26. (மூஸா) கூறினார்: அவன்தான் உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான். 27. (ஃபிர்அவ்ன்) கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் இந்த தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.” 28. (மூஸா) கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் மறைகிற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும் இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிந்து கொள்வீர்கள்). 29. (ஃபிர்அவ்ன்) கூறினான்: “என்னை அன்றி வேறு ஒரு கடவுளை நீர் எடுத்துக் கொண்டால் (எனது சிறையில்) சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.” 30. (மூஸா) கூறினார்: (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ள மறுப்பாய்!) 31. (ஃபிர்அவ்ன்) கூறினான்: ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (என்னிடம்) அதைக் கொண்டுவாரீர். 32. ஆக, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) பெரிய மலைப் பாம்பாக ஆகிவிட்டது. 33. இன்னும், அவர் தனது கையை (சட்டையின் முன் பக்க துவாரத்திலிருந்து) வெளியே எடுக்க, உடனே அது பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையானதாக ஆகிவிட்டது.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute