Sign in
Sign in
Sign in
Select Language
026

Ash-Shu'ara 26:30 قال اولو جيتك بشيء مبين ٣٠

26:30
قَالَ
أَوَلَوۡ
جِئۡتُكَ
بِشَيۡءٖ
مُّبِينٖ
٣٠
அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

After the Rational Proof, Fir`awn resorts to Force

When proof had been established against Fir`awn, clearly and rationally, he resorted to using force against Musa, thinking that after this there would no further room for discussion. So he said:

لَئِنِ اتَّخَذْتَ إِلَـهَاً غَيْرِى لأَجْعَلَنَّكَ مِنَ
…

After the Rational Proof, Fir`awn resorts to Force

When proof had been established against Fir`awn, clearly and rationally, he resorted to using force

…
More Tafsirs

Read in Context

Chapter 26, Page 368, Juz 19

10. (நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக. 11. ‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.) 12. அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார். 13. இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக! 14. மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்). 15. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன். 16. ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.'' 17. ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.) 18. (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர். 19. நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான். 20. அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன். 21. ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான். 22. ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.) 23. ‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான். 24. அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார். 25. அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான். 26. அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார். 27. அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான். 28. அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார். 29. அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான். 30. அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார். 31. அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான். 32. ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது. 33. மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.

- Abdul Hameed Baqavi

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute