Sign in
Sign in
Sign in
Select Language
026

Ash-Shu'ara 26:84 واجعل لي لسان صدق في الاخرين ٨٤

26:84
وَٱجۡعَل
لِّي
لِسَانَ
صِدۡقٖ
فِي
ٱلۡأٓخِرِينَ
٨٤
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

The Prayer of Ibrahim for Himself and for His Father

Here Ibrahim, upon him be peace, asks his Lord to give him Hukm. Ibn `Abbas said, "This is knowledge."

وَأَلْحِقْنِى بِالصَّـلِحِينَ

(and join me with the righteous.) means, `make me one of the righteous in this world and the Hereafter.' This is like

…

The Prayer of Ibrahim for Himself and for His Father

Here Ibrahim, upon him be peace, asks his Lord to give him Hukm. Ibn `Abbas said, "This is knowled

…
More Tafsirs

Read in Context

Chapter 26, Page 371, Juz 19

69. (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக. 70. அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, 71. அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள். 72. அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? 73. அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார். 74. அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள். 75. நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார். 76. நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்). 77. நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன். 78. அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான். 79. அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான். 80. நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான். 81. அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான். 82. கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன். 83. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக! 84. பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக! 85. இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக! 86. என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார். 87. (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! 88. அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா. 89. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). 90. இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும். 91. வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும். 92. அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே? 93. (இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும். 94. , 95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள். 95. , 95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள். 96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: 97. ‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,) 98. (தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்! 99. (பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை. 100. எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே! 101. (எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே! 102. நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள். 103. மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை. 104. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.

- Abdul Hameed Baqavi

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute