Sign in
Sign in
Sign in
Select Language
042

Ash-Shuraa 42:18 يستعجل بها الذين لا يومنون بها والذين امنوا مشفقون منها ويعلمون انها الحق الا ان الذين يمارون في الساعة لفي ضلال بعيد ١٨

42:18
يَسۡتَعۡجِلُ
بِهَا
ٱلَّذِينَ
لَا
يُؤۡمِنُونَ
بِهَاۖ
وَٱلَّذِينَ
ءَامَنُواْ
مُشۡفِقُونَ
مِنۡهَا
وَيَعۡلَمُونَ
أَنَّهَا
ٱلۡحَقُّۗ
أَلَآ
إِنَّ
ٱلَّذِينَ
يُمَارُونَ
فِي
ٱلسَّاعَةِ
لَفِي
ضَلَٰلِۭ
بَعِيدٍ
١٨
அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

A Warning to Those Who dispute concerning Matters of Religion

Here Allah warns those who try to hinder those who believe in Allah, from following His path.

وَالَّذِينَ يُحَآجُّونَ فِى اللَّهِ مِن بَعْدِ مَا اسَتُجِيبَ لَهُ

(And those who dispute concerning Allah, after it has been accepted,) means, tho

…

A Warning to Those Who dispute concerning Matters of Religion

Here Allah warns those who try to hinder those who believe in Allah, from following His p

…
More Tafsirs

Read in Context

Chapter 42, Page 485, Juz 25

10. எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்களோ அதன் இறுதி தீர்ப்பு அல்லாஹ்வின் பக்கம்தான் உள்ளது. அந்த அல்லாஹ்தான் என் இறைவன் ஆவான். அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் பக்கமே நான் முற்றிலும் திரும்புகிறேன். 11. அவன்தான், வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும், கால்நடைகளில் ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். இ(ப்படி ஜோடியாக ஏற்படுத்திய)தில் அவன் உங்களை அதிகமாக படை(த்து வாழவை)க்கிறான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். 12. வானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை) சுருக்குகிறான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். 13. அவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான். 14. தங்களிடம் கல்வி வந்ததன் பின்னரே தவிர அவர்கள் (தங்களுக்குள்) பல பிரிவுகளாக பிரியவில்லை. (அவர்கள் அவ்வாறு பிரிந்தது) தங்களுக்கு மத்தியில் இருந்த பொறாமையினால்தான். ஒரு குறிப்பிட்ட தவணை(யாகிய மறுமை நாள் வரும்) வரை (அவன் தனது தண்டனையை உங்களுக்கு பிற்படுத்துவான் என்ற) ஒரு வாக்கு உமது இறைவன் புறத்தில் இருந்து முன் சென்று இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். (அவர்களது கதை முடிக்கப்பட்டிருக்கும்.) நிச்சயமாக, இவர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அதில்பெரிய சந்தேகத்தில் இருக்கிறார்கள். 15. ஆக, இதன் பக்கமே (-உமக்கும் நூஹுக்கும் மற்ற நபிமார்களுக்கும் நாம் எதை மார்க்கமாக அமைத்தோமோ அந்த மார்க்கத்தின் பக்கமே) நீர் அழைப்பீராக! நீர் கட்டளையிடப்பட்டது போன்றே (உமக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில்) நீர் நிலையாக நீடித்து உறுதியாக இருப்பீராக! அவர்களின் (-இந்த சத்திய மார்க்கத்தில் சந்தேகித்தவர்களின்) மனவிருப்பங்களை நீர் பின்பற்றாதீர்! இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் இறக்கிய வேதங்களை நான் நம்பிக்கை கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும் என்று நான் பணிக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவன், இன்னும் உங்கள் இறைவன் ஆவான். எங்களுக்கு எங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). நமக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் தர்க்கம் வேண்டாம். அல்லாஹ்தான் (நம்மை) ஒன்று சேர்(த்து நமக்கு மத்தியில் தீர்ப்பளி)ப்பான். அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.” 16. இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், - அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் - தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே (அழிந்துபோகக்கூடியதே) ஆகும்! இன்னும், அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. 17. அல்லாஹ், உண்மையுடன் கூடிய இந்த வேதத்தையும் தராசையும் இறக்கி (நீதமாக நடக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி)னான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு யார் அறிவிப்பார்? (அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவிக்க முடியாது.) 18. அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். 19. அல்லாஹ், தன் அடியார்கள் மீது மிக கருணை(யும் தயவும்) உடையவன். அவன், தான் நாடுகிறவர்களுக்கு உணவளிக்கிறான். அவன்தான் மிக வலிமை உள்ளவன், (யாவரையும்) மிகைத்தவன்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute