Sign in
Sign in
Sign in
Select Language
009

At-Tawbah 9:105 وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمومنون وستردون الى عالم الغيب والشهادة فينبيكم بما كنتم تعملون ١٠٥

9:105
وَقُلِ
ٱعۡمَلُواْ
فَسَيَرَى
ٱللَّهُ
عَمَلَكُمۡ
وَرَسُولُهُۥ
وَٱلۡمُؤۡمِنُونَۖ
وَسَتُرَدُّونَ
إِلَىٰ
عَٰلِمِ
ٱلۡغَيۡبِ
وَٱلشَّهَٰدَةِ
فَيُنَبِّئُكُم
بِمَا
كُنتُمۡ
تَعۡمَلُونَ
١٠٥
(நபியே!) இன்னும், (போருக்கு வராமல் பின்தங்கிவிட்டு, பிறகு மன்னிப்பு கோரியவர்களிடம்) கூறுவீராக: “நீங்கள் (நல்ல அமல்களை அதிகம்) செய்யுங்கள். ஆக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். இன்னும், மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுமையில்) மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Warning the Disobedient

Mujahid said that this Ayah carries a warning from Allah to those who defy His orders. Their deeds will be shown to Allah, Blessed and Most Honored, and to the Messenger and the believers. This will certainly occur on the Day of Resurrection, just as Allah said,

يَوْمَئِذٍ تُعْ

…

Warning the Disobedient

Mujahid said that this Ayah carries a warning from Allah to those who defy His orders. Their deeds will be shown to Allah, Bles

…
More Tafsirs

Read in Context

Chapter 9, Page 203, Juz 11

100. (இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். 101. இன்னும் உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது பிடிவாதமாக நிலைத்திருந்து அழிச்சாட்டியம் செய்கிறார்கள். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம்தான் அவர்களை அறிவோம். விரைவில் அவர்களை இருமுறை தண்டிப்போம். பிறகு, (மறுமையில் நரகத்தின்) பெரிய தண்டனையின் பக்கம் (அவர்கள்) மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். 102. இன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத) மற்றவர்கள் சிலரும் (மதீனாவிலும் அதைச் சுற்றிலும்) இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். நல்ல செயலையும் மற்ற (சில) கெட்ட செயலையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான். 103. (நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; இன்னும், (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். 104. நிச்சயமாக, அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை (-அவர்கள் திருந்துவதையும் மன்னிப்புக் கோருவதையும்) ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், தர்மங்களை எடுக்கிறான்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா? 105. (நபியே!) இன்னும், (போருக்கு வராமல் பின்தங்கிவிட்டு, பிறகு மன்னிப்பு கோரியவர்களிடம்) கூறுவீராக: “நீங்கள் (நல்ல அமல்களை அதிகம்) செய்யுங்கள். ஆக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். இன்னும், மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுமையில்) மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான். 106. இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒன்று, (அவர்கள் திருந்தவில்லை என்றால்) அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது, (அவர்கள் திருந்திவிட்டால்) அவன் அவர்களை மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான். 107. இன்னும், கெடுதல் செய்வதற்காகவும்; நிராகரிப்பிற்காகவும்; நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு முன்னர் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர் பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக் கொண்டவர்களும் (மதீனாவிலும் மதீனாவை சுற்றிலும்) இருக்கிறார்கள். இன்னும், “நாங்கள் நன்மையைத் தவிர (கெட்டதை) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் அவர்கள் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். 108. (நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான். 109. அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தமது கட்டிடத்தை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது, சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் தமது கட்டிடத்திற்கு அடித்தளமிட்டு, அது அவருடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். 110. அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute