Sign in
Sign in
Sign in
Select Language
009

At-Tawbah 9:56 ويحلفون بالله انهم لمنكم وما هم منكم ولاكنهم قوم يفرقون ٥٦

9:56
وَيَحۡلِفُونَ
بِٱللَّهِ
إِنَّهُمۡ
لَمِنكُمۡ
وَمَا
هُم
مِّنكُمۡ
وَلَٰكِنَّهُمۡ
قَوۡمٞ
يَفۡرَقُونَ
٥٦
இன்னும், “நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும், அவர்கள் (உங்களை கண்டு) பயப்படுகின்ற மக்கள் ஆவார்கள்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Exposing Hypocrites' Fright and Fear

Allah describes to His Prophet the fright, fear, anxiety and nervousness of the hypocrites,

يَحْلِفُونَ بِاللَّهِإِنَّهُمْ لَمِنكُمْ

(They swear by Allah that they are truly of you), swearing a sure oath,

وَمَا هُم مِّنكُمْ

(while they are not of you), in reality,

و
…

Exposing Hypocrites' Fright and Fear

Allah describes to His Prophet the fright, fear, anxiety and nervousness of the hypocrites,

يَحْلِفُونَ بِاللَّهِإ
…
More Tafsirs

Read in Context

Chapter 9, Page 196, Juz 10

49. இன்னும், (நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சோதனையில்தான் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது. 50. (நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. இன்னும், உமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இன்னும், அவர்களோ மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் (உம்மை விட்டு) திரும்பி செல்கிறார்கள். 51. (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும். 52. (நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ், தன்னிடமிருந்து; அல்லது, எங்கள் கரங்களால் ஒரு தண்டனையின் மூலம் உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்! நிச்சயமாக நாங்கள் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறோம். 53. (நபியே! நயவஞ்சககர்களை நோக்கி) கூறுவீராக: “விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்.” 54. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; இன்னும், அவர்கள் சோம்பேறிகளாக இருந்த நிலையில் தவிர தொழுகைக்கு வர மாட்டார்கள்; இன்னும், அவர்கள் வெறுத்தவர்களாக இருந்த நிலையில் தவிர தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும் காரணம்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை. 55. ஆகவே, (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை தண்டிப்பதற்கும், இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான். 56. இன்னும், “நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும், அவர்கள் (உங்களை கண்டு) பயப்படுகின்ற மக்கள் ஆவார்கள். 57. ஓர் ஒதுங்குமிடத்தை; அல்லது, (மலைக்) குகைகளை; அல்லது, ஒரு சுரங்கத்தை அவர்கள் கண்டால் அவர்களோ விரைந்தவர்களாக அதன் பக்கம் திரும்பி (ஓடி)யிருப்பார்கள். 58. இன்னும், (நபியே! நீர் கொடுக்கின்ற) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் இருக்கின்றனர். ஆக, அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படுவார்களேயானால் திருப்தியடைவார்கள். இன்னும், அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்ப(ட்)டு (உம்மை குறை கூறு)கிறார்கள். 59. இன்னும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்திருக்க வேண்டுமே! இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும், அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்” என்று அவர்கள் கூறி இருக்க வேண்டுமே!

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute