Sign in
Sign in
Sign in
Select Language
052

At-Tur 52:39 ام له البنات ولكم البنون ٣٩

52:39
أَمۡ
لَهُ
ٱلۡبَنَٰتُ
وَلَكُمُ
ٱلۡبَنُونَ
٣٩
அவனுக்கு பெண்பிள்ளைகளும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Affirming Tawhid and annulling the Plots of the Idolators. This is the position where Tawhid of Allah's Lordship andDivinity are affirmed

Allah the Exalted said,

أَمْ خُلِقُواْ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ الْخَـلِقُونَ

(Or were they created by nothing Or were they themselves the creators) Allah asks t

…

Affirming Tawhid and annulling the Plots of the Idolators. This is the position where Tawhid of Allah's Lordship andDivinity are affirmed

Allah the Exa

…
More Tafsirs

Read in Context

Chapter 52, Page 525, Juz 27

29. ஆக, (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஆக, உமது இறைவனின் அருட்கொடையால் நீர் குறி சொல்பவராகவோ பைத்தியக்காரராகவோ இல்லை. 30. “(இவர்) ஒரு கவிஞர், காலத்தின் அசம்பாவிதங்கள் அவர் மீது இறங்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா? 31. (நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன்தான்.” 32. அவர்களது அறிவுகள்தான் இ(ந்த கற்பனை சிலைகளை வணங்குவ)தற்கு அவர்களை ஏவுகின்றதா? அல்லது, அவர்கள் (அல்லாஹ்வின் மீதே பொய்கூறி) எல்லை மீறக்கூடிய (பாவிகளான) மக்களா? 33. “இ(ந்த வேதத்)தை இவரே தானாக இட்டுக்கட்டி கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, (இவர்கள் பொய் கூறுகிறார்கள்.) இவர்கள் (இந்த வேதத்தை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 34. ஆக, இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களும் இது போன்ற (-இந்த குர்ஆனைப் போன்ற) ஒரு பேச்சை (-ஒரு வேதத்தை) கொண்டு வரட்டும்! 35. ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா? 36. இவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்களோ படைக்கப்பட்டவர்கள், படைப்பவர்கள் அல்ல. பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கிறார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள். 37. இவர்களிடம் உமது இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது, இவர்கள் (அல்லாஹ்வை) அடக்கி கட்டுப்படுத்தி வைப்பவர்களா? 38. அவர்களுக்கு ஓர் ஏணி இருந்து, அதில் (-அவர்கள் ஏறிச்சென்று, அல்லாஹ்விடம் தங்களது கொள்கைதான் சரியானது என்று இறைவனின் வாக்கை நேரடியாக) அவர்கள் செவியுறுகின்றனரா? ஆக, அப்படி இருந்தால் அவர்களில் (அல்லாஹ்வின் வாக்கை) செவியுற்றவர் தெளிவான ஓர் ஆதாரத்தை கொண்டு வரட்டும். 39. அவனுக்கு பெண்பிள்ளைகளும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா? 40. அவர்களிடம் கூலி எதையும் நீர் கேட்கிறீரா? (அதனால் ஏற்பட்ட) கடன் தொகையினால் அவர்கள் அதிகம் சுமைகளுக்கு ஆளாகி விட்டார்களா? 41. அவர்களிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கின்றதா? ஆக, அவர்கள் அதை (மக்களுக்கு) எழுதி கொடுக்கிறார்களா? 42. அவர்கள் (உமக்கும், உமது மார்க்கத்திற்கும்) சூழ்ச்சியை நாடுகின்றனரா? ஆக, நிராகரித்தவர்கள்தான் சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள். (அல்லாஹ்வின் தண்டனை அவர்களை சூழ்ந்து கொள்ளும். ஆகவே, நபியே! அல்லாஹ்வை நம்பி, உமது காரியத்தில் முன்னேறி செல்வீராக!) 43. அல்லாஹ்வை அன்றி கடவுள் அவர்களுக்கு உண்டா? அவர்கள் இணைவைக்கும் தெய்வங்களை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன். (அவனுக்கு யாரும் இணை துணை இல்லை. அவன் ஒருவனே இறைவன், வணங்கப்படுவதற்கு தகுதியானவன்.) 44. (அவர்களை அழிப்பதற்காக) வானத்தில் இருந்து விழக்கூடிய (வானத்தின்) துண்டுகளை அவர்கள் பார்த்தால், “(இது) ஒன்று சேர்ந்த மேகங்கள்” என்று கூறுவார்கள். (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) 45. ஆகவே, (நபியே!) அவர்கள் அழிக்கப்படுகின்ற அவர்களுடைய (தண்டனை) நாளை அவர்கள் சந்திக்கின்ற வரை அவர்களை விட்டுவிடுங்கள்! 46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் (பிறரால்) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். 47. நிச்சயமாக, அநியாயம் செய்தவர்களுக்கு அ(ந்த மறுமையின் தண்டனை வருவ)தற்கு முன்னரே (உலகத்திலும்) தண்டனை உண்டு. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை) அறியமாட்டார்கள். 48. (நபியே!) உமது இறைவனின் தீர்ப்புக்காக (-அது வரும் வரை) பொறு(மையாக இரு)ப்பீராக! ஆக, நிச்சயமாக நீர் நமது கண்களுக்கு முன்னால் (-நமது பார்வையிலும் பாதுகாப்பிலும்) இருக்கிறீர். இன்னும், நீர் (முற்பகல் தூக்கத்தில் இருந்து) எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து துதித்து தொழுவீராக (-ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுவீராக)! 49. இன்னும், இரவில் (மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகள் மூலம்) அவனை துதித்து தொழுவீராக! இன்னும், (இரவின் இறுதியில்) நட்சத்திரங்கள் மறைந்த பின்னர் (அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகை மூலம்) அவனை துதித்து தொழுவீராக!

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute