Sign in
Sign in
Sign in
Select Language
043

Az-Zukhruf 43:81 قل ان كان للرحمان ولد فانا اول العابدين ٨١

43:81
قُلۡ
إِن
كَانَ
لِلرَّحۡمَٰنِ
وَلَدٞ
فَأَنَا۠
أَوَّلُ
ٱلۡعَٰبِدِينَ
٨١
(நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.”
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ

حـم - تَنزِيلُ الْكِتَـبِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ

(Ha-Mim. By the manifest Book.) means, plain and clear in both wording and meaning, because it was revealed in the language of the Arabs, which is the most eloquent language for communication among peop

…

بِسْمِ اللَّهِ الرَّحْمَـنِ الرَّحِيمِ

حـم - تَنزِيلُ الْكِتَـبِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ

(Ha-Mim. By the manifest Book.) means, plain and cle

…
More Tafsirs

Read in Context

Chapter 43, Page 495, Juz 25

68. (இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். 69. (என் அடியார்கள்) எத்தகையோர் என்றால் அவர்கள் நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர். இன்னும், அவர்கள் (நமக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்களாக இருந்தார்கள். 70. நீங்களும் உங்கள் மனைவிகளும் (ஈமான் கொண்ட உங்களைப் போன்றவர்கள் எல்லோரும்) சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! 71. தங்கத்தினால் ஆன தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். இன்னும், அதில் (அவர்களது) மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பீர்கள். 72. இதுதான், நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளின் காரணமாக உங்களுக்கு சொந்தமாக்கி வைக்கப்பட்ட சொர்க்கமாகும். 73. உங்களுக்கு அதில் அதிகமான (-வகை வகையான) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் (மனமாற) உண்பீர்கள். 74. நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் தண்டனையில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். 75. அவர்களை விட்டும் தண்டனை குறைக்கப்படாது. இன்னும், அவர்கள் அ(ந்த தண்டனைகள் குறைக்கப்படும் என்ப)தில் நம்பிக்கை இழந்திருப்பார்கள். 76. நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் முற்றிலும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். 77. இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)” 78. திட்டவட்டமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் இந்த உண்மையை வெறுக்கிறீர்கள். 79. (இந்த உண்மைக்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்யப்போகிறோம். 80. நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள். 81. (நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.” 82. வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி(யாகிய அவன்) அவர்கள் வர்ணிக்கின்ற (இந்த பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். 83. ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள். 84. அவன் வானத்திலும் வணங்கப்படும் இறைவனாக, பூமியிலும் வணங்கப்படும் இறைவனாக இருக்கிறான். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான். 85. வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். 86. அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.) 87. அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்! 88. இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-தூதருடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது. 89. ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! இன்னும், (அவர்களுக்கு) ஸலாம் கூறிவிடுவீராக! ஆக, அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute