Sign in
Sign in
Sign in
Select Language
041

Fussilat 41:40 ان الذين يلحدون في اياتنا لا يخفون علينا افمن يلقى في النار خير ام من ياتي امنا يوم القيامة اعملوا ما شيتم انه بما تعملون بصير ٤٠

41:40
إِنَّ
ٱلَّذِينَ
يُلۡحِدُونَ
فِيٓ
ءَايَٰتِنَا
لَا
يَخۡفَوۡنَ
عَلَيۡنَآۗ
أَفَمَن
يُلۡقَىٰ
فِي
ٱلنَّارِ
خَيۡرٌ
أَم
مَّن
يَأۡتِيٓ
ءَامِنٗا
يَوۡمَ
ٱلۡقِيَٰمَةِۚ
ٱعۡمَلُواْ
مَا
شِئۡتُمۡ
إِنَّهُۥ
بِمَا
تَعۡمَلُونَ
بَصِيرٌ
٤٠
நிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

The Punishment of the Deniers and the Description of the Qur'an

إِنَّ الَّذِينَ يُلْحِدُونَ فِى ءَايَـتِنَا

(Verily, Yulhiduna Fi Our Ayat) Ibn `Abbas said, "Al-Ilhad means putting words in their improper places." Qatadah and others said, "It means disbelief and obstinate behavior."

لاَ يَخْفَوْنَ عَلَ
…

The Punishment of the Deniers and the Description of the Qur'an

إِنَّ الَّذِينَ يُلْحِدُونَ فِى ءَايَـتِنَا

(Verily, Yulhiduna Fi Our Ayat) Ibn `Abbas s

…
More Tafsirs

Read in Context

Chapter 41, Page 481, Juz 24

33. யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்? 34. நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார். 35. இ(ந்த குணத்)தை பொறுமையாளர்கள் தவிர கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும், பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர இ(ந்த குணத்)தை கொடுக்கப்பட மாட்டார்கள். 36. நிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். 37. இரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால். 38. ஆக, அவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்), உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கிறார்கள். இன்னும், அவர்கள் சோர்வடைய மாட்டார்கள். 39. இன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். 40. நிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான். 41. நிச்சயமாக எவர்கள் இந்த வேதத்தை - அது அவர்களிடம் வந்தபோது - நிராகரித்தார்களோ (அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே.) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். 42. அதற்கு முன்னிருந்தும் அதற்குப் பின்னிருந்தும் பொய்யர்கள் அதனிடம் வரமாட்டார்கள். (பொய்யர்கள் யாராலும் அதில் இல்லாததை அதில் சேர்க்கவும் முடியாது, அதில் உள்ளதை அதில் இருந்து எடுக்கவும் முடியாது.) மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது). 43. உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தருகின்ற தண்டனை கொடுப்பவன் ஆவான். 44. அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால், “இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே” என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! “இது (-இந்த குர்ஆன் அதை) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்கள் எந்த மொழி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு) நேர்வழியும் நிவாரணமும் ஆகும்.” இன்னும், எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிய முடியாது. இந்த வேதத்தை நிராகரிக்கும்) அவர்கள் மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள் (போலும். ஆகவேதான் இந்த வேதத்தின் சத்தியத்தை அவர்களால் புரிய முடியவில்லை போலும்).

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute