Sign in
Sign in
Sign in
Select Language
040

Ghafir 40:20 والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء ان الله هو السميع البصير ٢٠

40:20
وَٱللَّهُ
يَقۡضِي
بِٱلۡحَقِّۖ
وَٱلَّذِينَ
يَدۡعُونَ
مِن
دُونِهِۦ
لَا
يَقۡضُونَ
بِشَيۡءٍۗ
إِنَّ
ٱللَّهَ
هُوَ
ٱلسَّمِيعُ
ٱلۡبَصِيرُ
٢٠
இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Warning of the Day of Resurrection and Allah's judgement on that Day

`The Day that is drawing near' is one of the names of the Day of Judgement. It is so called because it is close, as Allah says:

أَزِفَتِ الاٌّزِفَةُ - لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ كَاشِفَةٌ

(The Day of Resurrection draws near. None

…

Warning of the Day of Resurrection and Allah's judgement on that Day

`The Day that is drawing near' is one of the names of the Day of Judgement. It is

…
More Tafsirs

Read in Context

Chapter 40, Page 469, Juz 24

10. நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) சப்தமிட்டு அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியதாகும். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்தீர்கள்.” 11. அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இன்னும், இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். ஆக, நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டோம். ஆகவே, (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?” 12. இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.) 13. அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கிறான். இன்னும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரத்தின் மூலதனமாகிய மழையை) இறக்குகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவர்களைத் தவிர (இதன் மூலம்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள். 14. ஆகவே, அல்லாஹ்வை - அவனுக்கு மார்க்கத்தை (-வழிபாடுகளை) பரிசுத்தமாக்கியவர்களாக - அழையுங்கள்! (இணைவைக்கின்ற) நிராகரிப்பாளர்கள் (அதை) வெறுத்தாலும் சரியே! 15. அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளைகளை உள்ளடக்கிய வஹ்யை இறக்குவான் (உலகத்தார் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (மக்களை) அவர் எச்சரிப்பதற்காக. 16. அந்நாளில் அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்பார்கள். அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. “இன்று ஆட்சி யாருக்கு உரியது?” (என்று அவன் கேட்பான். பதில் அளிப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனே பதில் அளிப்பான்:) “(நிகரற்ற) ஒருவனாகிய, (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனாகிய அல்லாஹ்விற்கே உரியது ஆட்சி அனைத்தும்.” 17. இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்ததற்கு பதிலாக கூலி கொடுக்கப்படும். இன்று (யார் மீதும்) அறவே அநியாயம் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான். 18. இன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார். 19. கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான். 20. இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute