Sign in
Sign in
Sign in
Select Language
040

Ghafir 40:37 اسباب السماوات فاطلع الى الاه موسى واني لاظنه كاذبا وكذالك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون الا في تباب ٣٧

40:37
أَسۡبَٰبَ
ٱلسَّمَٰوَٰتِ
فَأَطَّلِعَ
إِلَىٰٓ
إِلَٰهِ
مُوسَىٰ
وَإِنِّي
لَأَظُنُّهُۥ
كَٰذِبٗاۚ
وَكَذَٰلِكَ
زُيِّنَ
لِفِرۡعَوۡنَ
سُوٓءُ
عَمَلِهِۦ
وَصُدَّ
عَنِ
ٱلسَّبِيلِۚ
وَمَا
كَيۡدُ
فِرۡعَوۡنَ
إِلَّا
فِي
تَبَابٖ
٣٧
“(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

How Fir`awn mocked the Lord of Musa

Allah tells us of the arrogant and hostile defiance of Fir`awn and his rejection of Musa, when he commanded his minister Haman to build him a tower, i.e., a tall, high, strong fortress. He built it of bricks made from baked clay, as Allah says:

فَأَوْقِدْ لِى يَهَـم
…

How Fir`awn mocked the Lord of Musa

Allah tells us of the arrogant and hostile defiance of Fir`awn and his rejection of Musa, when he commanded his min

…
More Tafsirs

Read in Context

Chapter 40, Page 471, Juz 24

28. ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை - அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக - நீங்கள் கொல்கிறீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிக்கின்ற சில (தண்டனை) உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.” 29. “எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.” 30. இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.” 31. நூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை. 32. “இன்னும், என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (மக்கள் ஒருவரை ஒருவர்) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.” 33. அந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. 34. திட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆக, அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்டபோது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான், எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான். 35. இவர்கள் தங்களுக்கு வந்த ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிப்பவர்கள், அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகிறான். 36. ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! எனக்காக ஒரு (பெரிய, உயரமான) கோபுரத்தைக் கட்டு. நான் அந்த வாசல்களுக்கு சென்றடைய வேண்டும்.” 37. “(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute