Sign in
Sign in
Sign in
Select Language
011

Hud 11:106 فاما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق ١٠٦

11:106
فَأَمَّا
ٱلَّذِينَ
شَقُواْ
فَفِي
ٱلنَّارِ
لَهُمۡ
فِيهَا
زَفِيرٞ
وَشَهِيقٌ
١٠٦
ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகத்தில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

The Condition of the Wretched People and their Destination

Allah, the Exalted, says,

لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ

(in it they will experience Zafir and Shahiq.) Ibn `Abbas said, "Az-Zafir is a sound in the throat and Ash-Shahiq is a sound in the chest. This means that their exhaling will be Zafir an

…

The Condition of the Wretched People and their Destination

Allah, the Exalted, says,

لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ

(in it they will experience Zafir an

…
More Tafsirs

Read in Context

Chapter 11, Page 233, Juz 12

96. திட்டவட்டமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பினோம், 97. ஃபிர்அவ்ன்; இன்னும், அவனுடைய பிரமுகர்களிடம். ஆக, அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையை பின்பற்றினார்கள். ஆனால், ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை. 98. அவன் மறுமை நாளில் தன் மக்களுக்கு (வழிகாட்டியாக) முன் செல்வான். பிறகு, அவர்களை நரகத்தில் சேர்த்து விடுவான். இன்னும், சேரும் இடங்களில் அது கெட்ட சேருமிடமாகும். 99. இன்னும், இ(ம்மை வாழ்வாகிய இ)திலும் மறுமை நாளிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அது (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட மிகக் கெட்ட சன்மானமாகும். 100. இவை, (நிராகரித்த) ஊர் (வாசி)களின் சரித்திரங்களிலிருந்து உள்ளவை ஆகும். இவற்றை உமக்கு விவரித்துக் கூறுகிறோம். இவற்றில் (மக்கள் எல்லாம் அழிந்து) முகடுகள் இடிந்து சுவர்கள் மட்டும் நிற்கின்ற ஊர்களும் உள்ளன; இன்னும், முற்றிலும் வேர் அறுக்கப்பட்(டு அடியோடு அழிக்கப்பட்)ட ஊர்களும் இருக்கின்றன. 101. இன்னும், நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, உம் இறைவனின் கட்டளை வந்தபோது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைத்து வணங்குகின்ற அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; இன்னும், அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (எதையும்) அதிகப்படுத்தவில்லை! 102. இன்னும், ஊர்களை, - அவையோ அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் (தண்டனையால்) பிடித்தால், அவனது பிடி இது போன்றுதான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி, துன்புறுத்தக் கூடியதாகும்; மிகக் கடுமையானதாகும் . 103. மறுமையின் தண்டனையைப் பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அது, மக்கள் அதற்காக ஒன்று சேர்க்கப்படும் நாளாகும். இன்னும், அது (மக்கள் எல்லோரும்) ஆஜாராகும் நாளாகும். 104. இன்னும், எண்ணப்பட்ட ஒரு தவணைக்காகவே தவிர அதை (-அந்த மறுமை நாளை) நாம் பிற்படுத்த வில்லை. 105. அது வரும் நாளில், அவனுடைய அனுமதி இருந்தாலே தவிர எந்த ஓர் ஆன்மாவும் பேசமுடியாது. ஆக, அவர்களில் துர்ப்பாக்கியவானும் இருப்பார். நற்பாக்கியவானும் இருப்பார். 106. ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகத்தில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு. 107. (நம்பிக்கையாளர்களில் உள்ள பாவிகள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அதில் அவர்கள் (நிராகரிப்பாளர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுவதை செய்(து முடிப்)பவன் ஆவான். 108. ஆகவே, (நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்து) நற்பாக்கியம் பெற்றவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். எனினும், (நம்பிக்கை கொண்டு, ஆனால் பாவங்களை செய்த நம்பிக்கையாளர்கள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அத்தகையவர்கள் தண்டனை அனுபவிப்பதற்காக நரகத்தில் தள்ளப்பட்டு; பிறகு, சொர்க்கம் செல்ல அனுமதிக்கபப்டுவார்கள். பிறகு சொர்க்கம் சென்ற எல்லோரும்) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள். 109. ஆகவே, (நபியே! அந்த சிலைகளின் பிரமாண்டத்தையும் அவற்றுக்கு செய்ப்படுகின்ற ஆடம்பர சடங்குகளையும் பார்த்து) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் (சிலைகளில்) எதை வணங்கினார்களோ அது போன்றவைகளை தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (தண்டனையின்) பாகம் குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் இவர்களுக்கு முழுமையாகக் கொடுப்போம்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute