Sign in
Sign in
Sign in
Select Language
011

Hud 11:15 من كان يريد الحياة الدنيا وزينتها نوف اليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون ١٥

11:15
مَن
كَانَ
يُرِيدُ
ٱلۡحَيَوٰةَ
ٱلدُّنۡيَا
وَزِينَتَهَا
نُوَفِّ
إِلَيۡهِمۡ
أَعۡمَٰلَهُمۡ
فِيهَا
وَهُمۡ
فِيهَا
لَا
يُبۡخَسُونَ
١٥
எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Whoever wants the Worldly Life, then He will have no Share of the Hereafter

Al-`Awfi reported that Ibn `Abbas said concerning this verse, "Verily those who show off, will be given their reward for their good deeds in this life. This will be so that they are not wronged, even the amount equivalent to

…

Whoever wants the Worldly Life, then He will have no Share of the Hereafter

Al-`Awfi reported that Ibn `Abbas said concerning this verse, "Verily those

…
More Tafsirs

Read in Context

Chapter 11, Page 223, Juz 12

15. எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள். 16. அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை. இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்து விடும். இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே. 17. ஆக, எவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவான அத்தாட்சியின் மீது இருக்கிறார்களோ; இன்னும், - அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓதிக் கொண்டிருக்கிறாரோ: இன்னும், அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ - அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். இன்னும், (ஏனைய) கூட்டங்களிலிருந்து எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாக இருக்கும். ஆகவே, (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த உண்மைதான்! எனினும், மக்களில் அதிகமானோர் (இதை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். 18. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களை விட மகா அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது) “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது இறங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 19. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், அதில் கோணலைத் தேடுகிறார்கள். இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். 20. அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. இன்னும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. இன்னும், அவர்கள் (படிப்பினை பெறுகின்ற பார்வையால் இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. 21. அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள். இன்னும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (-அவர்கள் வணங்கிய சிலைகள் இறுதியாக) அவர்களை விட்டு மறைந்துவிடும். 22. சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள். 23. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைகொண்டு, நற்செயல்களைச் செய்து, தங்கள் இறைவனின் பக்கம் மிக்க பயத்துடனும் பணிவுடனும் திரும்பினார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். 24. (இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன்; இன்னும், பார்ப்பவன், செவியுறுபவனைப் போன்றாகும். இரு பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute