Sign in
Sign in
Sign in
Select Language
050

Qaf 50:12 كذبت قبلهم قوم نوح واصحاب الرس وثمود ١٢

50:12
كَذَّبَتۡ
قَبۡلَهُمۡ
قَوۡمُ
نُوحٖ
وَأَصۡحَٰبُ
ٱلرَّسِّ
وَثَمُودُ
١٢
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் ஸமூது சமுதாய மக்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Reminding the Quraysh of the Destruction of earlier Disbelieving Nations

Allah the Exalted warns the disbelievers of Quraysh and reminds them of the punishment and painful torment that He sent in this life on their likes, who disbelieved before them. For instance, Allah the Exalted punished the peopl

…

Reminding the Quraysh of the Destruction of earlier Disbelieving Nations

Allah the Exalted warns the disbelievers of Quraysh and reminds them of the pu

…
More Tafsirs

Read in Context

Chapter 50, Page 518, Juz 26

1. நம்பிக்கையாளர்களே! (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். 2. மாறாக, அவர்களோ அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். ஆக, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்து விட்ட)னர். (உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று அவர்களை நபி எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:) 3. “நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது நடப்பதற்கு சாத்தியமற்ற) மிக தூரமான மீட்சியாகும்.” 4. அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். (எழுதப்பட்ட செய்திகளை) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் நம்மிடம் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்பட்டு மிக்க பாதுகாப்பாக இருக்கிறது.) 5. மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை) - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கிறார்கள். 6. அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? இன்னும், அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா?” 7. இன்னும், பூமியை அதை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம். 8. (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (நமது வசனங்களை நாம் விவரிக்கிறோம்). 9. இன்னும், அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய மழை) நீரை வானத்தில் இருந்து இறக்கினோம். ஆக, அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம். 10. இன்னும் உயரமான பேரீச்ச மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன. 11. அடியார்களுக்கு உணவாக (-வாழ்வாதாரமாக) இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). இன்னும், அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும். 12. இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் ஸமூது சமுதாய மக்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர். 13. இன்னும், ஆது சமுதாய மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.) 14. இன்னும், தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.) (மேற்கூறப்பட்ட இவர்கள்) எல்லோரும் தூதர்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை (-எனது தண்டனை அவர்களுக்கு வருவது) உறுதியாகிவிட்டது. 15. ஆக, முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே!) மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதைப் பற்றி குழப்பத்தில் இருக்கிறார்கள்.

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute