Sign in
Sign in
Sign in
Select Language
012

Yusuf 12:37 قال لا ياتيكما طعام ترزقانه الا نباتكما بتاويله قبل ان ياتيكما ذالكما مما علمني ربي اني تركت ملة قوم لا يومنون بالله وهم بالاخرة هم كافرون ٣٧

12:37
قَالَ
لَا
يَأۡتِيكُمَا
طَعَامٞ
تُرۡزَقَانِهِۦٓ
إِلَّا
نَبَّأۡتُكُمَا
بِتَأۡوِيلِهِۦ
قَبۡلَ
أَن
يَأۡتِيَكُمَاۚ
ذَٰلِكُمَا
مِمَّا
عَلَّمَنِي
رَبِّيٓۚ
إِنِّي
تَرَكۡتُ
مِلَّةَ
قَوۡمٖ
لَّا
يُؤۡمِنُونَ
بِٱللَّهِ
وَهُم
بِٱلۡأٓخِرَةِ
هُمۡ
كَٰفِرُونَ
٣٧
(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Yusuf calls His Jail Mates to Tawhid even before He interprets Their Dreams

Yusuf, peace be upon him, told the two men that he has knowledge in the interpretation of whatever they saw in their dream, and that he will tell them about the interpretation of the dreams before they become a reality. This

…

Yusuf calls His Jail Mates to Tawhid even before He interprets Their Dreams

Yusuf, peace be upon him, told the two men that he has knowledge in the int

…
More Tafsirs

Read in Context

Chapter 12, Page 239, Juz 12

36. (அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்). 37. (அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். 38. என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை. 39. சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? 40. அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,) 41. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.) 42. மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னோர். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.

- Abdul Hameed Baqavi

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute