Sign in
Sign in
Sign in
Select Language
012

Yusuf 12:78 قالوا يا ايها العزيز ان له ابا شيخا كبيرا فخذ احدنا مكانه انا نراك من المحسنين ٧٨

12:78
قَالُواْ
يَٰٓأَيُّهَا
ٱلۡعَزِيزُ
إِنَّ
لَهُۥٓ
أَبٗا
شَيۡخٗا
كَبِيرٗا
فَخُذۡ
أَحَدَنَا
مَكَانَهُۥٓۖ
إِنَّا
نَرَىٰكَ
مِنَ
ٱلۡمُحۡسِنِينَ
٧٨
அவர்கள் கூறினார்கள்: “அதிபரே! அவருக்கு “(கண்ணியத்தில்) பெரியவரான (வயதில்) முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை பிடித்து வைப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நற்குண சீலர்களில் காண்கிறோம்.”
Continue Reading

Read Tafsir

Ibn Kathir (Abridged)

Yusuf's Brothers offer taking One of Them instead of Binyamin as a Slave, Yusuf rejects the Offer

When it was decided that Benyamin was to be taken and kept with Yusuf according to the law they adhered by, Yusuf's brothers started requesting clemency and raising compassion in his heart for them,

قَال
…

Yusuf's Brothers offer taking One of Them instead of Binyamin as a Slave, Yusuf rejects the Offer

When it was decided that Benyamin was to be taken and

…
More Tafsirs

Read in Context

Chapter 12, Page 244, Juz 13

69. மேலும், அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் அணைத்து)க் கொண்டார். இன்னும், “நிச்சயமாக நான்தான் உனது சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி கவலை படாதே! (சங்கடப் படாதே!)” என்று கூறினார். 70. ஆக, அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தி கொடுத்தபோது தன் சகோதரனின் சுமையில் (அளப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற) குவளையை வைத்து விட்டார். பிறகு, ஓர் அறிவிப்பாளர் “ஓ! (தானிய) சுமைகளை ஏற்றி செல்லும் பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார். 71. இவர்கள், அ(றிவிப்பை செய்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து, “நீங்கள் எதை இழந்துவிட்டு தேடுகிறீர்கள்?” என்று கூறினார்கள். 72. “அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். இன்னும், “அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்” (என்று அவர்களில் ஒருவர் கூறினார்.) 73. “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை. இன்னும், நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று அவர்கள் கூறினார்கள். 74. “நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்த பொருளை திருடிய)வரின் தண்டனை என்ன?” என்று கூறினார்கள். 75. “அவரின் தண்டனையாவது, எவருடைய சுமையில் (அந்த பொருள்) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினார்கள். 76. ஆக, அவர் தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் (மற்ற சகோதரர்களின்) மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளியே எடுத்தார். யூஸுஃபுக்கு இப்படித்தான் நாம் காரணத்தை உருவாக்கினோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை (தன்னுடன்) பிடித்து வைக்க முடிந்தவராக இல்லை. நாம் விரும்புகிறவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். இன்னும், கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் நன்கறிந்த கல்வியாளர் ஒருவர் இருக்கிறார். 77. அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரர் முன்னர் (இப்படித்தான்) திருடி இருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். யூஸுஃப், அதை தன் உள்ளத்தில் மறைத்து கொண்டார். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று (தன் மனதில்) கூறினார். 78. அவர்கள் கூறினார்கள்: “அதிபரே! அவருக்கு “(கண்ணியத்தில்) பெரியவரான (வயதில்) முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை பிடித்து வைப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நற்குண சீலர்களில் காண்கிறோம்.” 79. (யூஸுஃப்) கூறினார்: “எவரிடம் நம் பொருளை பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர (யாரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டும் அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.”

- Sheikh Omar Sharif bin Abdul Salam

Notes and Reflections

You do not have any notes or reflections on this verse.

Notes placeholders

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran.Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran.Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute